Tuesday, August 4, 2009

Tamil News

பிரதான செய்திகள்


தமிழகத்தில் 300 வரையிலான விடுதலைப்புலிகள் பதுங்கியிருக்கலாம் என சந்தேகம்
[ 2009-08-04 12:11:17 ]
இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற 300 க்கும் அதிகமான தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பதுங்கி இருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. [
மேலும்]


1 - 10 இலட்சம் ரூபா வரை லஞ்சம் கொடுத்து இதுவரை அகதி முகாமகளிலிருந்து 50 ஆயிரம் பேர் வெளியேற்றம்?
[ 2009-08-04 03:44:01 ]
வவுனியா பகுதியிலுள்ள முகாம்களில் தங்கியிருந்த வன்னிப் பிராந்தியத்தைச் சேர்ந்த அகதிகளில் சுமார் 50 ஆயிரம் பேர் தற்போது அரசியல் கட்சிகளாகச் செயற்படும் அரச சார்பு முன்னாள் போராளிக் குழுக்களுக்கு பெருந்தொகைப் பணத்தை இலஞ்சமாகக் கொடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக லக்பிம நியூஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. [
மேலும்]
பிந்திய செய்திகள்


யாழில் ஈ.பி.டி.பி. யின் வேட்பாளர் ஒருவர் அடிப்படை மனித உரிமையை மீறியுள்ளார்
[ 2009-08-04 15:20:05 ]
ஈ.பி.டி.பி.யின் கட்சி வேட்பாளர் ஒருவர், யாழ்ப்பாண மீனவர்களை ஈழ மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு வாக்களித்தால், மீன்பிடி தடை மீண்டும் அமுல் செய்யப்படும் என அச்சுறுத்தியுள்ளார். [
மேலும்]


யாழ்.-கொழும்பு இடையில் ஒருங்கிணைக்கப்பட்ட ரயில்-பஸ் சேவை நடாத்த போக்குவரத்து அமைச்சு திட்டம்
[ 2009-08-04 13:14:42 ]
யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் ஒருங்கிணைக்கப்பட்ட ரயில் - பஸ் சேவை ஒன்றை நடத்த போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. [
மேலும்]
செய்திகள்


யாழ்ப்பாணத்தில் செல்வந்தர்களிடம் தொலைபேசியில் கப்பம் கேட்டு அச்சுறுத்தல்
[ செவ்வாய்க்கிழமை, 04 ஓகஸ்ட் 2009, 10:13.44 AM ]
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் செல்வந்தர்களின் வீடுகளுக்கு இரவு வேளைகளில் தொலைபேசியில் கப்பம் கேட்டு அச்சுறுத்தல் விடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. [
மேலும்]


மூதூர் பணியாளர்கள் கொலை தொடர்பில் சர்வதேச விசாரணைக் குழு அவசியம்: சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை


[ செவ்வாய்க்கிழமை, 04 ஓகஸ்ட் 2009, 10:11.32 AM ]
மூதூரில் கொலை செய்யப்பட்ட 17 தன்னார்வ தொண்டு பணியாளர்கள் தொடர்பில், சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது. [மேலும்]


மூன்றாம் ஆண்டு மாணவி மீது வகுப்பாசிரியை தாக்குதல்
[ செவ்வாய்க்கிழமை, 04 ஓகஸ்ட் 2009, 10:08.38 AM ]
மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவியொருவர், வகுப்பாசிரியையால் தாக்கப்பட்டு அப்புத்தளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. [
மேலும்]


இராமே‌ஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
[ செவ்வாய்க்கிழமை, 04 ஓகஸ்ட் 2009, 09:51.51 AM ]
க‌‌ச்ச‌தீவு அருகே ‌மீ‌ன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்டி‌ரு‌ந்த இராமே‌ஸ்வர‌ம் ‌‌‌மீனவ‌ர்க‌ள்‌ ‌மீது தா‌க்குத‌ல் நட‌த்‌திய இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர், ‌மீ‌ன்‌பிடி வலைகளை அறு‌த்து ‌எ‌றி‌ந்து வ‌ி‌ட்டு கட‌லி‌ல் ‌வீ‌சி செ‌ன்றன‌ர். [
மேலும்]


ஈழத்தமிழர்களுக்கு தமிழக அரசு 4-வது கட்டமாக ரூ.15 கோடி நிவாரணப் பொருட்கள் அனுப்ப ஏற்பாடு
[ செவ்வாய்க்கிழமை, 04 ஓகஸ்ட் 2009, 09:00.19 AM ]
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகளுக்கு தமிழ்நாடு சார்பில் இதுவரை 3 தடவை நிவாரணப்பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது 4-வது கட்டமாக 15 கோடி ரூபா நிவாரணப் பொருட்கள் அனுப்ப ஏற்பாடு நடந்து வருகிறது. [
மேலும்]


யாழ்., வவுனியா தேர்தல் செய்திகள் சேகரிக்க பத்திரிகையாளர்களுக்கு தடை: ஏ.பி. செய்தி நிறுவனம்
[ செவ்வாய்க்கிழமை, 04 ஓகஸ்ட் 2009, 08:52.55 AM ]
யாழ்ப்பாணம், வவுனியா உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 8 ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் தொடர்பான செய்திகளைச் சேகரிப்பதற்கு பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஏ.பி. செய்திச் சேவை தெரிவித்திருக்கின்றது. [
மேலும்]


வவுனியாவில் தமிழ் கூட்டமைப்பு வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் மீது கடும் தாக்குதல்: சிவசக்தி ஆனந்தன்
[ செவ்வாய்க்கிழமை, 04 ஓகஸ்ட் 2009, 08:34.48 AM ]
வவுனியா குருமண்காடு பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு மிரட்டப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட கூட்டமைப்பு எம்.பி.யான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். [
மேலும்]


உயர்நீதிமன்றம் முன்னர் வழங்கிய தீர்ப்புக்களை மாற்றியமைக்க முடியாது: புதிய பிரதம நீதியரசர்
[ செவ்வாய்க்கிழமை, 04 ஓகஸ்ட் 2009, 02:58.17 AM ]
உயர் நீதிமன்றினால் முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்புக்களை மாற்றியமைக்க முடியாது என புதிய பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தெரிவித்துள்ளார். [
மேலும்]


மனிதாபிமான அவலம் ஏற்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார் கெஹலிய ரம்புக்வெல
[ செவ்வாய்க்கிழமை, 04 ஓகஸ்ட் 2009, 02:49.11 AM ]
இலங்கையில் மனிதாபிமான அவலம் ஏற்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித அடிப்படையும் இல்லை என அமைச்சரும், பாதுகாப்புப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். [
மேலும்]


கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் "வணங்காமண்" பொருட்கள் வவுனியா செல்லும்
[ செவ்வாய்க்கிழமை, 04 ஓகஸ்ட் 2009, 02:41.54 AM ]
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களிலுள்ளோருக்காக புலம்பெயர் தமிழ்மக்களால் அனுப்பப்பட்டு கொழும்புத் துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் வணங்காமண் நிவாரணப் பொருட்களை வெளியே எடுத்து வவுனியாவுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. [
மேலும்]


கதிர்காமம் தீ மிதிப்பில் 100 பேர் படுகாயம்: 50 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி
[ செவ்வாய்க்கிழமை, 04 ஓகஸ்ட் 2009, 02:13.05 AM ] []
வரலாற்றுப் புகழ்மிக்க கதிர்காமம் முருகன் கோயிலில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தீ மிதிப்பில் கலந்து கொண்ட பக்தர்களில் 100 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. [
மேலும்]


இயல்பு வாழ்க்கையே இல்லாத நிலையில் யாழ். மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல்: இப்படிக் கூறுகிறது தேர்தல் கண்காணிப்பு அமைப்பு
[ செவ்வாய்க்கிழமை, 04 ஓகஸ்ட் 2009, 01:50.10 AM ]
யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கையில் இன்னமும் இயல்புநிலை உண்டாகாத நிலையில் இலங்கை அரசினால் அம்மக்கள் மீது யாழ். மாநகரசபைத் தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு நிலையம் (CMEV) சுட்டிக்காட்டியுள்ளது. [
மேலும்]


தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய அதிகாரம் தேவை என்பதை தேர்தல் மூலம் சர்வதேசத்துக்கு அறிவியுங்கள்: யாழ்.நகரில் சம்பந்தன் அறைகூவல்
[ செவ்வாய்க்கிழமை, 04 ஓகஸ்ட் 2009, 01:29.15 AM ]
தமது அடிப்படை உரிமைகளை அனுபவிக்க வகை செய்யும் உறுதிப்படுத்தும் சுயநிர்ணய அதிகாரம் தமக்குத் தேவை என்பதை, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா உள்ளூராட்சித் தேர்தல்கள் மூலம் தமிழ் மக்கள் சர்வதேசத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறைகூவல் விடுத்துள்ளார். [
மேலும்]


கொட்டாஞ்சேனையில் ஐந்து தமிழ் இளைஞர்கள் கைது
[ செவ்வாய்க்கிழமை, 04 ஓகஸ்ட் 2009, 01:21.54 AM ]
கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெட்டியாவத்தை சந்தியில் நேற்றுக்காலை இடம்பெற்ற சோதனை நடவடிக்கையில் ஐந்து தமிழ் இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். [
மேலும்]


தமிழின உணர்வாளர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவிய தமிழக அரசை கண்டித்து வழக்கு நிதியளிப்பு பொதுக்கூட்டம்
[ திங்கட்கிழமை, 03 ஓகஸ்ட் 2009, 07:32.57 PM ] []
புதுச்சேரி பெரியார் திராவிடர் கழகம் சார்பாக “தமிழின உணர்வாளர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவிய தமிழக அரசை கண்டித்து வழக்கு நிதியளிப்பு பொதுக்கூட்டம்” புதுவை பெரியார் திடலில் நடைபெற்றது. [
மேலும்

No comments: